விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் ஊழியர்களை ஆனைமலை டிஎஸ்பி பவித்ரா எச்சரித்தார்.


Coimbatore: கோவை: தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதையடுத்து பள்ளி, கல்லூரி, வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 அரசு மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டதுடன், போதைப் பொருள் மற்றும் கள்ளச்சந்தை மது விற்பனையை கண்காணிக்க காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



இதன் தொடர்ச்சியாக, ஆனைமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திரா நகர், வேட்டைக்காரன்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு வால்பாறை உட்கோட்ட டிஎஸ்பி பவித்ரா தலைமையிலான காவல்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.



அப்போது கடை ஊழியர்களிடம் பேசிய டிஎஸ்பி பவித்ரா, “டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்குள் கட்டாயம் மூடப்பட வேண்டும். ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் மொத்தமாக விற்பனை செய்யக் கூடாது. விதிமுறைகளை மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதுடன், கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்,” என எச்சரித்தார்.

மேலும், கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவது கண்டறியப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...