ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என தமிழக நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.


Coimbatore: ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழக நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.

தமிழக நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளித் தொழில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் இத்துறையின் மூலம் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

குறிப்பாக நெசவாளர்கள் விசைத்தறி தொழிலின் மூலம் 1.60 லட்சம் மின் இணைப்புகளுடன் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. மேலும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கைத்தறி மற்றும் பெடல் தறிகள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தானியங்கி தறிகள் மூலம் தினந்தோறும் மூன்று கோடி மீட்டருக்கும் அதிகமான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

நெசவாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட கைத்தறி மற்றும் விசைத்தறி கூடங்களுக்கு மின்சார சலுகை, நெசவாளர்களுக்கு ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் நெசவாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆண்டுகளில் தமிழக ஜவுளித்துறை இந்திய அளவிலும், உலகளவிலும் முன்னிலை வகிக்க, ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களை நியமிக்கும் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொறுப்புகள் வழங்க தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...