கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு முடிந்ததும், மதுபானங்கள் பீளமேடு மண்டல குடோனுக்கு மாற்றப்பட உள்ளன.


Coimbatore:

கோவை: கோவை மாவட்டத்தில் மொத்தம் 254 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. புதிதாக பொறுப்பேற்ற தமிழக வெற்றிக் கழக அரசு, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூடப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கோவை மாவட்டத்தில் மட்டும் 69 கடைகள் மூடப்பட்டுள்ளன.

முதல் நாளில் 4 கடைகள், இரண்டாம் நாளில் 10 கடைகள் மூடப்பட்ட நிலையில், நேற்று மீதமிருந்த 55 கடைகளும் மூடப்பட்டன.

இந்த நிலையில், மூடப்பட்ட கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில்:

“கோவை மாவட்டத்தில் நிர்வாக வசதிக்காக டாஸ்மாக் வடக்கு மற்றும் தெற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கோவை வடக்கில் 156 கடைகளும், தெற்கில் 128 கடைகளும் என மொத்தம் 254 கடைகள் செயல்பட்டு வந்தன. தற்போது வடக்கில் 48 கடைகளும், தெற்கில் 21 கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் இனி மாவட்டத்தில் 215 டாஸ்மாக் கடைகள் மட்டுமே செயல்படும். மேலும், மூடப்பட்ட கடைகளுடன் இணைந்து செயல்பட்டு வந்த 50 பார்களும் மூடப்பட்டுள்ளன.

மூடப்பட்ட 69 கடைகளிலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்படாமல் இருப்பில் உள்ளன. அந்த இருப்புகளை கணக்கெடுக்கும் பணியில் ஒவ்வொரு கடைக்கும் இரண்டு பேர் வீதம் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கணக்கெடுப்பு பணி நிறைவடைந்ததும், அந்த மதுபானங்கள் பீளமேட்டில் உள்ள மண்டல டாஸ்மாக் மேலாளர் குடோனுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும்” என்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...