திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக்கியதால் சக்கரம் ஏறி இறங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tiruppur: திருப்பூரைச் சேர்ந்த சூர்யா (23) என்பவர் தனியார் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வந்துள்ளார். சமீபத்தில், அவருக்கு அரசு பேருந்தில் தற்காலிக நடத்துனராக பணி கிடைத்துள்ளது.



இன்று அதிகாலை 4 மணிக்கு தொரவலூர் செல்லும் அரசு பேருந்தில் பணியில் சேர வேண்டியிருந்ததால், இரவே பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது முன்பு பணியாற்றிய தனியார் பேருந்து நிறுவனத்தின் மினி பேருந்து அங்கு நிற்பதை கண்டு, அதன் முன்பாக துண்டு விரித்து படுத்து உறங்கியுள்ளார்.

இந்நிலையில், அதிகாலை 3.30 மணியளவில் வந்த தனியார் பேருந்து ஓட்டுனர், பேருந்தை பயணிகள் நிறுத்துமிடத்திற்கு கொண்டு செல்ல இயக்கியபோது, பேருந்தின் முன்பாக படுத்திருந்த சூர்யாவை கவனிக்காமல் வாகனத்தை இயக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பேருந்தின் சக்கரம் சூர்யா மீது ஏறி இறங்கியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் வயது நடத்துனர் ஒருவர் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...