கல்வித்துறையில் பாடதிட்டங்கள் மாற்றுவது குறித்து உயர்மட்ட குழு கருத்துக்களை வழங்கி இருப்பதாகவும், நீட் தேர்வினை எதிர்கொள்வதற்கு ஏற்றபடி தமிழக பாடதிட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பள்ளி கல்வியில் ரேங்கிங் முறை என்ற மக்களின் நீண்ட நாள் கனவு தற்போது நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது. குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகள் அறிவிக்கும் தமிழகத்தின் இந்த திட்டம் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்கின்றது.
மாணவர்கள் அனைவருக்கும் செல்போன் மூலம் தேர்வு முடிவு குறித்த தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த குறுஞ்செய்தி ஒரு சிலருக்கு மட்டும் செல்லாமல் இருக்கலாம். தேர்வு முடிவு வருவதற்கு முன்னரே புதிய நடைமுறையை அறிவித்தால் மட்டுமே மக்களிடம் வரவேற்பு இருக்கும் என்பதால் நேற்று புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய நடைமுறையினால் மாணவர்களும், பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மாணவர்களுக்கு மன அழுத்தம் கொடுக்கக் கூடாது என்பதற்காக தரவரிசை என்ற புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டது. மேலும் புதிய பாடத்திட்டம் குறித்து உயர்மட்ட குழு கருத்துக்களை வழங்கி இருக்கிறது. அதனை செயல் படுத்துவது குறித்து ஆலோசிக்கபட்டு வருகிறது. தமிழக கல்வி திட்டங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாரத பிரதமரின் துறையின் மூலமாகவே நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்த மனுவினை ஜனாதிபதிக்கு அனுப்ப இயலும். நீட் தேர்வினை எதிர்கொள்வதற்கு ஏற்றபடி தமிழக பாடதிட்டங்கள் மாற்றி அமைக்கப்படும். நீட் தேர்வில் கேள்விகள் மாற்றி கேட்கப்பட்டது குறித்து மத்திய அரசுதான் பதில் அளிக்க வேண்டும்" என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார்.
இதைத்தொடர்ந்து, இரு அணிகள் இணைப்பிற்கு அமைச்சர்கள் சீனிவாசனும், ஜெயகுமாரும் தடையாக இருக்கின்றனரா என்ற செய்தியாளர் கேள்விக்கு, இது அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி என அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.