மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல் மதுக்கூடங்கள், இறக்குமதி மதுக்கடைகள் ஆகியவற்றை மூட மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் உத்தரவிட்டுள்ளார். மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.


Coimbatore: மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மதுக்கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் உத்தரவிட்டுள்ளார். மே தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்பவன் குமார் கிரியப்பனவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "மே 1ஆம் தேதி தொழிலாளர் தினம் என்பதால், அன்றைய நாளை மதுவிலக்கு நாளாக அறிவித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

அரசு மதுக்கடைகள் மட்டுமின்றி, பார்கள், பொழுதுபோக்கு மன மகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கடைகள், தமிழ்நாடு ஹோட்டல், சுற்றுலாத் துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மது விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான மதுக்கடைகளும் மே தினத்தன்று மூடப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மே தினத்தன்று விதிகளுக்கு முரணாக மது விற்பனை செய்பவர்கள், சட்டவிரோதமாக மதுவை பதுக்கி வைத்திருப்பவர்கள், ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மதுவை எடுத்துச் செல்பவர்கள் மீதும் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937இன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

மதுவிலக்கு நாளில் சட்டத்தை மீறுவோர் மீது கண்காணிப்பு வைக்கப்படும் என்றும், மீறல் நடவடிக்கைகளை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் களத்தில் இறக்கப்படும் என்றும் ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தொழிலாளர் தினத்தை கௌரவிக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் இந்த மதுவிலக்கு உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...