தொண்டாமுத்தூர் தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தொண்டாமுத்தூர் ரவி தீவிர பரப்புரை

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் தொண்டாமுத்தூர் ரவி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கோரி பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்தார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.


Coimbatore: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இன்று தீவிர தேர்தல் பரப்புரை நடைபெற்றது. இப்பரப்புரையில் தொண்டபுத்தூர் ரவி முன்னின்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கோரி பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து பேசினார்.










ஆர்.எஸ்.புரம் பகுதி கழகத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த பரப்புரையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிரமாக பங்கேற்றனர். வேட்பாளர் N.R.கார்த்திகேயனின் சார்பாக வாக்காளர்களிடம் வாக்குறுதிகளை எடுத்துரைத்து, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.










இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, ஒன்றியம், பகுதி, பேரூர், வட்ட மற்றும் கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர். மேலும், தேர்தல் பொறுப்பாளர்கள், BLA2, BLC, BDA போன்ற பிரிவுகளின் உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.










மகளிர் அணியினர், கழகத்தின் மூத்த முன்னோடிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் பெருந்திரளாக இந்த தேர்தல் பரப்புரை நிகழ்வில் பங்கேற்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இப்பரப்புரையின்போது வாக்காளர்களிடம் தொண்டாமுத்தூர் தொகுதியின் வளர்ச்சி குறித்தும், கூட்டணியின் திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...