கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங்கம் 30.03.2026 அன்று நடைபெற்று சுற்றுச்சூழல் மற்றும் தூய்மை குறித்து வலியுறுத்தப்பட்டது.


Coimbatore:

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் IQAC மற்றும் ஒளிரும் கோவை தன்னார்வ அமைப்பு இணைந்து “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் 30.03.2026 அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் கருத்தரங்கின் நோக்கத்தை விளக்கினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், 50 ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக்கோவையை வெளியிட்டார்.

அவர் உரையாற்றும்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நகர தூய்மை மிக முக்கியமானவை என்றும், கோவையை ஆரோக்கியமான நகரமாக மாற்ற அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மாணவர்கள் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும், தூய்மை குறித்து சிறுவயதிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நிகழ்வில் முனைவர் சிஏ கைலாஷ் குமார் மற்றும் தமிழ்நாடு மாநில வனவிலங்கு வாரிய உறுப்பினர் காளிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இந்த கருத்தரங்கிற்காக மாநிலம் முழுவதும் இருந்து 50 ஆய்வுக்கட்டுரைகள் பெறப்பட்டன. அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 கட்டுரைகள் வல்லுநர் குழுவின் முன்னிலையில் வழங்கப்பட்டன.

அவற்றில் சிறந்த மூன்று கட்டுரைகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் தி சென்னை மொபைல்ஸ் நிறுவனர் ஏ.எம்.சம்சு அலி பரிசுகளை வழங்கினார்.

முதல் பரிசு ரூ.15,000 முனைவர் பி.நரசிம்மன், இரண்டாம் பரிசு ரூ.10,000 மாணவி வி.சண்முகபிரியா, மூன்றாம் பரிசு ரூ.5,000 மாணவிகள் எம்.மோகனா மற்றும் ஆர்.ஸ்ரீ லஷ்மி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

கருத்தரங்கில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்வை IQAC ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஒளிரும் கோவை அமைப்பினர் ஒருங்கிணைத்தனர்.

Newsletter

ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நெசவாளர்கள் கூட்டமைப்பு - இலவச மின்சாரம் வேண்டும்

ஈரோட்டில் தமிழக நெசவாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தனர். கைத்தறி மற்றும் விசைத்தறி...

நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து இலவச மின்சாரம் வழங்க மனு

Erode மாவட்டத்தில் முதல்வர் Stalin ஐ சந்தித்த தமிழ்நாடு நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள், தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற இ...

கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க முதல்வரிடம் மனு

ஈரோட்டில் தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, கைத்தறி மற்றும...

கோவையில் ஒரே நாளில் 27 வேட்புமனுக்கள்: முக்கிய கட்சி வேட்பாளர்கள் இன்னும் தாக்கல் செய்யவில்லை

Coimbatore மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 27 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மாவட்டத்தில் இதுவரை 42 வேட்பாளர்கள் மன...

வெள்ளியங்கிரி மலையேற்றத்தில் நெஞ்சு வலியால் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

Coimbatore மாவட்டம் வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது, Pharm-D மாணவரான முகேஷ் குமார் (23) மார்பு வலியால் சுயநினைவை இழந்த...

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் S.தாமோதரனை நேரில் சந்தித்து வாழ்த்திய அண்ணாமலை

கோவை: வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அஇஅதிமுக சார்பில் கிணத்துக்கடவு தொகுதி வேட்பாளர...