ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொதுக்கணக்குக் குழு கூட்டம் நடைபெற்றது

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் இன்று (மே 10) தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொதுக் கணக்குக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் முன்னிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக் கணக்குக்குழு தலைவர் கரி.இராமசாமி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுக்கணக்குக்குழு தலைவர் ஆய்வு மேற்கொண்டு அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பாக விவரங்களை தனிதனியே துறை வாரியாக கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக் கணக்குக்குழு தலைவர் கரி.இராமசாமி திட்டப்பணிகள் தொடர்பாக கூட்டுறவுத்துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கலால் துறை, தீயணைப்புத்துறை, போக்குவரத்துத்துறை, காவல்த்துறை, உயர் கல்வித்துறை, வருவாய்த்துறை, பத்திரப்பதிவுத்துறை, புள்ளியியல் துறை ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் பொதுக்கணக்குகள் சம்பந்தமாக ஆய்வுகள் தனிதனியே ஆய்வு மேற்கொண்டார்.



இதனைத்தொடர்ந்து, இந்த துறைகளில் நிலுவையிலுள்ள தொகையை அரசுக்கு உரிய காலத்திற்குள் முறையாக செலுத்த வேண்டுமென்றும் மேலும், திட்டங்கள் தொய்வின்றி செயல்படுவதை அலுவலர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். இன்று கோவை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டதில் பணிகள் சரியாக நடைபெற்றுள்ளது. இதை பொதுக்கணக்குழு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறது.

மேலும், தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் அனைத்து திட்டங்களும் கடைக்கோடி கிராமங்கள் வரை தகுதியுள்ள அனைவருக்கும் கிடைத்திடும் வன்னம் அலுவலர்கள் விரைந்து செயல்பட வேண்டும். கோவை மாவட்டம் மற்ற மாவட்டங்களை விட வளர்ச்சியடைந்த மாவட்டமாக உள்ளது.

மென்மேலும் வளர அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கோவை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக்கணக்குக்குழு தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக் கணக்குக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஆஸ்டின், நா.கார்த்திக், பொன்.சரஸ்வதி, ஒ.கே.சின்னராஜ். டி.செங்குட்டுவன், சி.வி.சேகர், ஆர்.நடராஜ், முனைவர் பழனிவேல் தியாகராஜன், கி.மாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், சட்டப்பேரவை துணைச் செயலாளர்கள் பாண்டியன், ரேவதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜா மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...