கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்தனர். நேற்று காலை 9 மணி அளவில் மீன் பிடிக்கச் சென்ற 11 வயது மாணவர்கள் சுஜித் குமார் மற்றும் பிரதோஷ் ஆகியோரின் உடல்கள் தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டன.


Coimbatore: கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு பள்ளி மாணவர்கள் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் நேற்று நிகழ்ந்துள்ளது.






கண்ணம்பாளையம் TVK நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் சுஜித் குமார் (11). அதே பகுதியைச் சேர்ந்த யுவராஜின் மகன் பிரதோஷ் (11). இவர்கள் இருவரும் காமாட்சிபுரம் பகுதியில் உள்ள கதிர்மில் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வந்தனர்.






நேற்று மார்ச் 26 அன்று இப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வந்ததால், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலில் மட்டுமே பள்ளி தொடங்க இருந்தது. இதனால் காலை நேரம் வீட்டில் இருந்த இரு மாணவர்களும், நேற்று காலை 9 மணி அளவில் வீட்டில் சாப்பிட்டு விட்டு மீன் பிடிக்கச் செல்வதாகக் கூறி வெளியேறினர்.






மாலை வரை மாணவர்கள் இருவரும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் பதற்றம் அடைந்தனர். பல்வேறு இடங்களில் தேடிய அவர்கள், கண்ணம்பாளையம் குளத்தில் இரு சிறுவர்களின் உடல்கள் மிதப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்தனர்.






குளத்தில் மிதந்த உடல்களை பார்த்த பெற்றோர்கள், அவை காணாமல் போன சுஜித் குமார் மற்றும் பிரதோஷ் என்பதை உறுதி செய்தனர். உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், குளத்தில் மூழ்கி உயிரிழந்த இரு சிறுவர்களின் உடல்களையும் மீட்டனர். பின்னர் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.




இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீன் பிடிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கண்ணம்பாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி விடுமுறை காலங்களில் குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் குழந்தைகள் தனியாக செல்வதை தடுக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...