குறிச்சி பகுதியில் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வுகாணாத மாநகராட்சியினைக் கண்டித்து அனைத்துக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்


கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குறிச்சி பகுதியில் குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, அனைத்து கட்சிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுந்தராபுரம் சங்கம் வீதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக குறிச்சி பகுதி செயலாளர் குறிச்சி பிரபாகரன் தலைமை தாங்கினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது காலி குடங்களுடன் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, முழக்கங்களை எழுப்பினர். கோவை மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் வாரம் ஒருமுறை குடிநீர் வழங்கப்படுவதாகவும், ஆனால் குறிச்சி பகுதியில் மாதம் ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர். 

மேலும், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுவதால் மக்கள் அவதிக்குள்ளாவதாகவும், மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டிய கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் மக்களை ஒருமுறை கூட பார்க்க வரவில்லை எனவும் தெரிவித்தனர்.

இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 45 பெண்கள் உட்பட 150 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...