இஸ்லாமியர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டியது எங்கள் கடமை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கோவை கோட்டைமேடு பகுதியில் மன்பஉல் உலூம் மெட்ரிகுலேஷன் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தும் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரையாற்றினார். இஸ்லாமியர்களின் பங்களிப்பை பாராட்டினார்.


Coimbatore: கோவை கோட்டைமேடு பகுதியில் இயங்கி வரும் மன்பஉல் உலூம் மெட்ரிகுலேஷன் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தும் துவக்க விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாத் தலைவர் இனாயத்துல்லாஹ் தலைமை தாங்கினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். மேலும், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் Kranthi Kumar Pati, கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது உரையில், தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, இந்தப் பள்ளியை தரம் உயர்த்தி இருப்பதாகவும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கல்வியை தரத்தோடு வழங்க வேண்டும் என்று எண்ணக்கூடியவர் என்றும் கூறினார். அதன்படி இந்தப் பள்ளி நிர்வாகம் தரமான கல்வியை தொடர்ந்து வழங்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.



அமைச்சர் மேலும் பேசுகையில், "நாடு விடுதலை பெற்றதற்கு முக்கிய காரணமாக விளங்கிக் கொண்டிருப்பவர்கள் இஸ்லாமியர்கள். அவர்களுக்கு என்றும் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டியது எங்களது கடமை" என்று குறிப்பிட்டார். மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், பெற்றவர்களுக்கு நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என்றும், ஆசிரியர்கள் கற்பிப்பதை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றும் கூறினார்.



ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாத், சிறப்பான கல்வி நிறுவனத்தை உருவாக்கி இருப்பதாக பாராட்டிய அமைச்சர், ஜமாத்தின் கீழ் கல்லூரி வரவேண்டும் என்றும், அதற்காக ஒரு தோழனாக இருந்து முழு முயற்சியோடு செயல்படுவேன் என்று உறுதி அளித்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...