கோவை விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தை கடத்த முயற்சி: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தில் கடத்தல் மிரட்டல் துண்டு சீட்டு கண்டெடுக்கப்பட்டது. விரிவான சோதனைக்குப் பின் வதந்தி என உறுதி செய்யப்பட்டு, விமானம் தாமதமாக புறப்பட்டது.


Coimbatore: கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்ல இருந்த இண்டிகோ விமானத்தில் கடத்தல் மிரட்டல் துண்டு சீட்டு கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அக்டோபர் 13 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் 169 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, விமானத்துக்குள் கிடந்த ஒரு துண்டு சீட்டில் விமானத்தை கடத்தப் போவதாக எழுதப்பட்டிருந்தது.

உடனடியாக இண்டிகோ ஊழியர்கள் மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்குத் தகவல் அளித்தனர். பாதுகாப்பு நடவடிக்கைக்காக விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். இதில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் ஆகியோரும் அடங்குவர்.

பின்னர் அனைத்து பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. விமானமும் முழுவதுமாக தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த விரிவான சோதனைக்குப் பின்னர், மிரட்டல் துண்டுச் சீட்டு வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, ஒன்றரை மணி நேரம் தாமதமாக மாலை 5.30 மணியளவில் விமானம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்தால் கோவை விமான நிலையத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...