உடுமலை அருகே அந்தியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அந்தியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அந்தியூர் பகுதியில் அமைந்துள்ள பெருந்தேவிதாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில், வரதராஜ பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர் உட்பட 16 வகையான அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.



முக்கிய நிகழ்வாக, வரதராஜ பெருமாளுக்கு பஞ்சராத்திர ஆகம முறைப்படி வெகு விமரிசையாக திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் காப்பு கட்டுதல், மாலை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு வைபவங்கள் நடைபெற்றன.

இந்த சிறப்பு நிகழ்வில் கலந்து கொள்ள கோவை, திருப்பூர், உடுமலை, பொள்ளாச்சி, Dharapuram உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

புரட்டாசி நான்காவது சனிக்கிழமை சிறப்பு பூஜை மற்றும் திருக்கல்யாணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Newsletter

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...