கோவை மாவட்ட ஆட்சியருடன் இந்திய தொழில் வர்த்தக சபையினர் சந்திப்பு - உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து விவாதம்

கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடியுடன் இந்திய தொழில் வர்த்தக சபையினர் சந்திப்பு நடத்தினர். கோவையின் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து விவாதித்தனர். பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியை இந்திய தொழில் வர்த்தக சபையினர் நேற்று (அக்டோபர் 11) சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, கோவையின் உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பாக விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த சந்திப்பு குறித்து இந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவர் ராஜேஷ் லுந்த் கூறுகையில், "கிழக்கு புறவழிச்சாலை, விமான நிலைய விரிவாக்கம், கோவை-கரூர் விரைவுச் சாலை, மேட்டுப்பாளையம் மற்றும் சிங்காநல்லூரில் அமையும் மேம்பாலங்கள், எல் அண்டு டி பைபாஸ் விரிவாக்கம், கோவை மாஸ்டர் பிளான், நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் அவற்றை விரைவுபடுத்த வேண்டிய தேவை குறித்து மாவட்ட ஆட்சியருடன் விவாதித்தோம்," என்றார்.

மேலும், "விரைவில் மாஸ்டர் பிளான் வெளியிடப்படும் என்பது உட்பட, நேர்மறையான பதில்களை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். கோவை தொழில் வர்த்தக சபை சார்பில் தொடர்ந்து உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தொழில் வளர்ச்சி குறித்து மாவட்ட நிர்வாகம், மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுவோம்," என்று ராஜேஷ் லுந்த் தெரிவித்தார்.

இந்த முக்கிய சந்திப்பில் தொழில் வர்த்தக சபையின் துணைத் தலைவர்களான நடராஜ், துரைராஜ், செயலாளர்களான பிரதீப், கார்த்திக், மற்றும் பொருளாளர் கைலாஷ்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...