கிணத்துக்கடவில் கொண்டைக்கடலை விதைக்கு 50 சதவீதம் மானியம்: வேளாண் துறை அறிவிப்பு

கிணத்துக்கடவு வட்டாரத்தில் கொண்டைக்கடலை சாகுபடிக்கு 50 சதவீதம் மானியத்தில் விதைகள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் வேளாண் துறை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கிணத்துக்கடவு வட்டாரத்தில் ஆண்டுதோறும் 100 ஹெக்டேர் அளவில் கொண்டைக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மழை பொழிவு குறைந்ததால் 30 ஹெக்டேர் வரை மட்டுமே கொண்டைக்கடலை சாகுபடி இருந்தது.

ஜக்கார்பாளையம், பொள்ளாச்சி வடக்கு பகுதிகளில் கொண்டைக்கடலை சாகுபடி அதிகப்படியாக இருக்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கை கொடுக்கும் பட்சத்தில் 100 ஹெக்டேர் அளவை பூர்த்தி செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விவசாயிகள் கொண்டைக்கடலை சாகுபடியை துவங்கலாம் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

கொண்டைக்கடலை விதை, ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா போன்ற திரவ உயிர் உரங்கள் மற்றும் பயிர்களுக்கு தேவையான நுண்ணூட்டங்கள் ஆகியவை 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு கொண்டைக்கடலை விதை வழங்க தேவையான அளவு வேளாண் துறை அலுவலகத்தில் இருப்பு உள்ளது.

விதைகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண் துறை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் மற்றும் துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் அக்டோபர் 10 அன்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...