ஆயுதபூஜை விடுமுறை: கிடுகிடுவென உயர்ந்த விமான கட்டணம்

ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையிலிருந்து புறப்படும் உள்நாட்டு விமான சேவைகளின் கட்டணம் அக்டோபர் 10 அன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.11,000 வரை அதிகரித்துள்ளது.


கோவை: ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையிலிருந்து புறப்படும் உள்நாட்டு விமான சேவைகளின் கட்டணம் இன்று (அக்டோபர் 10) அதிரடியாக உயர்ந்துள்ளது.

நாளை ஆயுத பூஜை கொண்டாடப்படும் நிலையில் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையாக இருப்பதால் மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்படத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே பேருந்துகள், ரயில்கள் நிரம்பி வழியும் நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணிகள் அதிக கட்டணம் செலுத்தி பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையிலிருந்து திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் உள்நாட்டு விமான சேவைகளின் டிக்கெட்டும் அதிகரித்துள்ளது.

சென்னை - கோவை விமான கட்டணம் ரூ.3,300 என்ற அளவில் இருந்து வந்த நிலையில் தற்போது ரூ.11,000 வரை உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு ரூ.5,000 வரை இருந்து வந்த கட்டணம் தற்போது ரூ.11,700 வரை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...