சென்னை விமான சாகச நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த வானதி சீனிவாசன்; தமிழக அரசை கேள்வி கேட்டு பதிவு

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்வில் உயிரிழந்த 5 பேருக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும், நிகழ்வின் ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசிடம் கேள்விகளை எழுப்பினார்.


Coimbatore: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமான சாகச நிகழ்வில் உயிரிழந்த 5 பேருக்கு இரங்கல் தெரிவித்தார். அவர் தனது பதிவில், "அடிப்படை வசதிகளின்றி கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலியான சம்பவத்தை அறிந்து பெரும் துயருற்றேன். இழப்பின் பிரிவால் வாடும் அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டார்.


மேலும், வானதி சீனிவாசன் தமிழக அரசை கேள்வி கேட்டு பல்வேறு கருத்துக்களை பதிவிட்டார். அவற்றில் சில:


1. "சாகச நிகழ்ச்சியைக் காண வரும் மக்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகளை செய்துதர தவறிய தமிழக முதல்வர் M. K. Stalin அவர்களைக் கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, பொது மக்களைக் குறைகூறுவதற்கு உங்களுக்கு உறுத்தவில்லையா Kanimozhi Karunanidhi அவர்களே?"


2. "லட்சக்கணக்கான பொதுமக்கள் கூடும் இடங்களில் மக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள், போதுமான ஆம்புலன்ஸ் வசதிகள், முதலுதவி வசதிகள், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமையல்லவா?"


3. "வெயிலின் தாக்கத்தைத் தவிர்க்க பொதுமக்களுக்கு எந்த வசதியும் செய்துதராத தமிழக முதல்வர், குடும்பசகிதமாக கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டு குளு, குளு பந்தலில் அமர்ந்து சாகச நிகழ்வை ரசித்துக் கொண்டிருந்தாரே, இதுதான் உங்கள் கட்சியின் சமூகநீதியா?"


இவ்வாறு வானதி சீனிவாசன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...