வடகிழக்கு பருவமழை: பேரிடர் புகார் அளிக்க எளிய முறை - கோவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாவட்ட நிர்வாகம் வடகிழக்கு பருவமழை காலத்தில் பேரிடர் புகார் அளிக்க எளிய முறையை அறிவித்துள்ளது. 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம், TN Alert செயலி மற்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


Coimbatore: கோவை மாவட்ட நிர்வாகம் வடகிழக்கு பருவமழை காலத்தில் பேரிடர் புகார் அளிக்க எளிய முறையை அறிவித்துள்ளது. அக்டோபர் 7 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், பேரிடர் குறித்து புகார் அளிக்கவும், மழையின் அளவு உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளவும் பல்வேறு வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 1077, 0422-2301114 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், வட்ட வாரியாக துணை ஆட்சியர் அளவில் கண்காணிப்புக் குழுக்களும், பல துறை அலுவலர்கள் அடங்கிய மண்டலக்குழுக்களும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க 66 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. மழைநீர் தேங்காமல் செல்ல வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டுள்ளன. பள்ளிக் கட்டிடங்கள் பழுது பார்க்கப்பட்டு மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு 'TN Alert' என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் பொதுமக்கள் தங்களது இருப்பிட வானிலை, முன்னெச்சரிக்கை செய்திகள், தினசரி மழையளவு, நீர்தேக்கங்களின் நீர் இருப்பு விவரம், பாதிப்படையக்கூடிய பகுதிகளின் விவரம், பேரிடர் காலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றிய அறிவுரைகள் ஆகியவற்றை தமிழிலேயே அறிந்து கொள்ளலாம். மேலும், மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விவரங்களை இந்த செயலி மூலம் எளிதாக புகார் அளிக்க முடியும்.

Newsletter

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...