கோவை கல்லூரிகளில் 'ஹெல்மெட் இல்லையேல் நுழைவு இல்லை' திட்டம் அமல்

கோவை காவல்துறை, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, கல்லூரிகளில் 'ஹெல்மெட் இல்லையேல் நுழைவு இல்லை' கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி விபத்துக்களைக் குறைக்கும் நோக்கம் கொண்டது.


கோவை: கோவை மாநகர காவல்துறை, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த முடிவு, அக்டோபர் 7 அன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அவினாசி சாலையில் உள்ள அனைத்து கல்லூரிகளின் முதல்வர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த முயற்சியை அனைத்து கல்லூரி முதல்வர்களும் ஏற்றுக்கொண்டு, உடனடியாக அமல்படுத்துவதாக உறுதியளித்துள்ளனர்.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு கல்லூரி நுழைவாயிலிலும் "No Helmet, No Entry" என்ற வாசகம் கொண்ட பதாகைகள் வைக்கப்படும். கல்லூரி நிர்வாகம் தங்கள் வளாகத்திற்குள் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தலைகவசம் அணிந்து வருவதை உறுதிப்படுத்தும்.

காவல்துறை அறிக்கையின்படி, இந்த திட்டம் விரைவில் இதர முக்கிய சாலைகளில் அமைந்துள்ள கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். மேலும், பள்ளிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், மால்கள் மற்றும் இருசக்கர வாகன நிறுத்தங்கள் என படிப்படியாக மாநகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.

இந்த முயற்சியின் மூலம், கல்லூரி நிர்வாகம் மற்றும் தொழில் நிறுவனங்கள் தங்கள் மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் உயிர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு தங்களுக்கும் உண்டு என்பதை உணர்ந்து, இந்த முன்முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த முயற்சி கோவை நகரில் இருசக்கர வாகன விபத்துக்களையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...