மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐ.நா. விருது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024-ஆம் ஆண்டிற்கான விருது கிடைத்துள்ளது. இதுவரை 1.80 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் இது குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.


தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024-ஆம் ஆண்டிற்கான United Nation Interagency Task Force Award விருது கிடைத்துள்ளதாக முதல்வர் மு. க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது X வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: "இந்தியத் துணைக் கண்டத்துக்கே முன்னோடித் திட்டமாக நமது திராவிட மாடல் அரசில் செயல்படுத்தப்பட்டுள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் தேடி வந்திருக்கிறது! ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதுவரையில், இந்தத் திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர்."

"ஒவ்வொருவரது இல்லத்துக்கும் சென்று மருத்துவச் சேவைகளை வழங்கும் நமது திட்டம், சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் அடையாளம்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024-ஆம் ஆண்டிற்கான United Nation Interagency Task Force Award விருது!" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "சிறப்பான முறையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி - கண்காணித்து - மேம்படுத்தி வரும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கும், அவருக்குத் துணை நிற்கும் துறைச் செயலாளர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறைப் பணியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்!" என்று தெரிவித்துள்ளார்.

"இந்தத் திட்டம் இன்னும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு மக்களுக்குப் பயனளிப்பதைத் தொடர்ந்து உறுதிசெய்வோம்!" என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...