பொள்ளாச்சி அருகே முறையற்ற மனநல காப்பகத்திற்கு சீல் - 39 பேர் மீட்பு

பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் அனுமதியின்றி இயங்கிய மனநல காப்பகத்தை அதிகாரிகள் மூடினர். 39 நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட மையத்திற்கு மாற்றப்பட்டனர். மோசமான சுகாதார நிலைமை கண்டறியப்பட்டது.



Coimbatore: பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் உள்ள சென்றாம் பாளையத்தில் முறையான அனுமதியின்றி இயங்கி வந்த தனியார் மனநல காப்பகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த நடவடிக்கையின் போது, 39 நபர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட மனநல காப்பக மையத்திற்கு மாற்றப்பட்டனர்.

கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாதி உத்தரவின் பேரில், மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ராஜசேகரன், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சந்திரமோகன், மற்றும் மனநல மருத்துவர் டாக்டர் கிருத்திகா ஆகியோர் இந்த காப்பகத்தை ஆய்வு செய்தனர்.



ஆய்வின் போது, அதிகாரிகள் பல குறைபாடுகளை கண்டறிந்தனர். ஒரே அறையில் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். சிலருக்கு காலில் இரும்பு விலங்குகள் மாட்டப்பட்டிருந்தன. கழிப்பிடங்கள் மிகவும் மோசமான நிலையில், தொற்றுநோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருந்தன.

மேலும், இந்த காப்பகம் கடந்த மூன்று ஆண்டுகளாக எவ்வித அதிகாரப்பூர்வ அனுமதியும் இன்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இந்த தகவல் உடனடியாக மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்கப்பட்டது.

கலெக்டரின் உத்தரவின் பேரில், காப்பகத்தில் இருந்த 30 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் உள்பட 39 பேர் அரசு அங்கீகரிக்கப்பட்ட மனநலக் காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர். பின்னர், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் இந்த முறைகேடான காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...