வெள்ளைத் தாளில் கையொப்பம் பெற்று மோசடி: முதியவர் காவல் ஆணையரிடம் புகார்

கோவையில் 71 வயது முதியவர் தனது வீட்டை வாடகைக்கு விட்டவர், வெள்ளைத் தாளில் கையொப்பம் பெற்று மோசடி செய்ததாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். வாடகை நிலுவை, வீடு மற்றும் ஆவணங்கள் அபகரிப்பு குறித்து விசாரணை கோரியுள்ளார்.


Coimbatore: கோவை உக்கடம் வின்சென்ட் ரோடு ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த 71 வயது முதியவர் பழனிசாமி, தனது வீட்டை வாடகைக்கு விட்டவர்கள் வெள்ளைத் தாளில் கையொப்பம் பெற்று மோசடி செய்ததாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

பழனிசாமியின் புகார் மனுவின்படி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டை (A Block 8) ஜன்னத் என்பவருக்கு மாதம் ₹2,500 வாடகைக்கு விட்டுள்ளார். Green Garden சங்கத்தைச் சேர்ந்த முத்தப்பா என்கிற அப்துல் ரகுமான் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் நடைபெற்றதாகவும், ₹75,000 முன்பணமாக பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜன்னத் முறையாக வாடகை செலுத்தாததால், பழனிசாமி நிலுவைத் தொகையை கேட்டபோது, எழுத படிக்கத் தெரியாத தன்னிடம் முத்தப்பா வெள்ளைத் தாளில் கையொப்பம் பெற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது ஜன்னத் ₹1,36,500 வாடகை நிலுவை வைத்துள்ள நிலையில், ஜன்னத்தும் முத்தப்பாவும் சேர்ந்து தனது வீட்டையும் ஆவணங்களையும் அபகரித்துக் கொண்டதாக பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இது குறித்து கேள்வி எழுப்பினால் இருவரும் சாதிப் பெயரைச் சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டுவதாகவும் பழனிசாமி தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

பழனிசாமிக்கு மாற்றுத்திறனாளி மகன் உட்பட நான்கு குழந்தைகள் உள்ளனர். மனைவி இறந்த நிலையில், மாற்றுத்திறனாளி மகனுடன் வசித்து வருகிறார். வீடு மாடியில் இருப்பதால் ஏற்பட்ட சிரமத்தால்தான் வீட்டை வாடகைக்கு விட்டதாக பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...