வாரம் ஒரு குளம்! கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று களப்பணியில் கோவை செங்குளம்!

கோவை மாவட்டம் தெற்கு, குனியமுத்தூர் பகுதியில் உள்ள செங்குளத்தில் அதிகப்படியான பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் குவித்துள்ளது. இதனை அகற்றும் களப்பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் நமது கோவை நமது பசுமை ஒருங்கிணைப்பில் காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்ற களப்பணியில் 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு குளத்தை சுத்தம் செய்தனர். 

இது குறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் பேசுகையில்; வாரந்தோறும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று கோவையில் உள்ள குளங்களை சுத்தம் செய்யும் பணியில் தன்னார்வலர்கள் பலர் ஒன்று சேர்ந்து இந்த தூய்மை பணியினை மேற்கொண்டு வருகிறோம்.



அதன் தொடர்ச்சியாக இன்று குனியமுத்தூர் பகுதியில் உள்ள செங்குளத்தில் அதிகப்படியான பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் குவித்துள்ள நிலையில் அதனை அகற்றும் களப்பணியில் நாங்கள் ஒன்று சேர்ந்து இறங்கிவுள்ளோம். இந்த செங்குளம் 265 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தில் தண்ணீர் முழுமைய வந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகியுள்ளது. தற்போது இக்குளத்திற்க்கு தண்ணீர் வர 12.5 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வாய்க்கால் தூர்வாரப்பட்டு வருகிறது. 

அதிகமாக இந்த குளத்தில் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக உள்ளதால் அதனை சுத்தம் செய்து வருகிறோம். தற்போது 200க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைத்துள்ளோம். இதில் குழுக்களாக பிரிந்து குளத்தில் ஆங்காங்கே உள்ள கழிவுகளை அகற்றி வருகின்றோம். முக்கியமா இந்த குளத்தில் ஓரத்தில் வளரும் கலை செடியான நெய்வேலி காட்டாமணக்கு குளத்தில் உள்ள நீர்களை உறுஞ்சுகிறது. இதனால் குளத்தில் மண் திட்டுக்களும் உருவாகிறது.



இந்த மண் திட்டுக்களினால் குளத்தில் நீர்வரத்து குறைகிறது. எனவே, இந்த களப்பணியில் பொதுமக்கள் அதிகளவில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இதன்மூலம் அரசு அதிகாரிகளுக்கும் நாங்கள் செய்யும் இந்த பணியால் அவர்கள் முன்வர வேண்டும். அதுமட்டுமல்லாமல், கோவையில் இதுபோன்ற குளங்களில் சுத்தம் செய்வதற்கு அரசு நிதிகள் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நாங்கள் முன் வைத்துள்ளோம் என்றார்.



Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...