மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

மண் சரிவால் இரண்டு நாட்கள் நிறுத்தப்பட்ட மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை இன்று (அக்டோபர் 2) மீண்டும் தொடங்கியது. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணித்தனர்.



கோவை: மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை இன்று (அக்டோபர் 2) காலை முதல் மீண்டும் தொடங்கியது. கடந்த இரண்டு நாட்களாக மண் சரிவு காரணமாக இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கும், நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கும் தினமும் மலை ரயில் சேவை நடைபெற்று வருகிறது. இந்த ரயிலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் இயற்கை எழிலை ரசித்து வருகின்றனர்.



கடந்த செப்டம்பர் 29 அன்று இரவு நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், பர்லியாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் பாதையில் கல்லாறு - அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே மண் சரிவு ஏற்பட்டது.



இதனால் ரயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன, மரங்கள் சாய்ந்தன.

இதன் காரணமாக, மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் சேவை செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று (அக்டோபர் 1) மாலை சீரமைப்பு பணிகள் முடிவடைந்தன.

இதனைத் தொடர்ந்து, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் இன்று (அக்டோபர் 2) முதல் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கும் என அறிவித்தது.



இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, காலை முதலே மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர்.



வழக்கம்போல் காலை 7:10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு மலை ரயில் புறப்பட்டுச் சென்றது. ரயிலில் பயணித்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் மலைப்பகுதியின் இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்தனர்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...