அனைவருக்கும் வீடுகள் கட்டும் திட்டத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது -அமைச்சர்கள் பெருமிதம்!


கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று கோயம்புத்தூர் மண்டலத்தைச் சேர்ந்த 10மாவட்டங்களைச் சேர்ந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய துறைகளின் மூலம் குடிசை மாற்று வாரியம் மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் வீடில்லாத அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தில் மேற்கொள்ளபபட்டு வரும் பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு வீட்டுவசதித்துறை மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை செயலாளர் தர்மேந்திரபிரதாப் யாதவ், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்றுவாரிய முதன்மை செயலாளர், மேலாண்மை இயக்குநர் ஷம்புகல்லோலிகர் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் முன்னிலையில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புதிட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மாவட்ட வாரியாக அலுவலர்களிடம் அனைவருக்கும் வீடுகள் கட்டும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு மேலும், ஆலோசனையும் வழங்கினர். 

இந்த ஆய்வுக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் பேசுகையில்,

அம்மா அவர்கள் இத்திட்டத்தை துவக்கி வைக்கும்பொழுது, முதல்கட்டமாக 10லட்சம் வீடுகள் பயனாளிகளுக்கு கட்டி வழங்கப்படும் அதற்காக ஒவ்வொரு வீட்டிற்கும், ரூ.2.10லட்சம் முழு மான்யம் வழங்கப்படும் என அறிவித்து துவக்கி வைத்தார்கள். அதற்கேற்ப இன்றும் அம்மா அவர்கள் வழியில் நடைபெற்று வரும் தமிழக அரசு தமிழக முதல்வர் அவர்களின் ஆலோசனைப்படி, இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் முக்கிய நோக்கம் தமிழகத்தில் குடிசைகளே முற்றிலும் இல்லாத மாநிலமாகவும், மற்றும் ஓட்டு வீடு, சிமெண்ட் சீட் வீடு ஆகியவை அப்புறப்படுத்தப்பட்டு அனைத்துப்பகுதிகளிலும் காண்கீரீட் வீடு அமைத்துக் கொடுக்கவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். அதன்படி, குடிசை மாற்று வாரியம் மூலம் 2,46,000 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதுடன் இதில் 1,00,000வீடுகள் பணி முடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு அதிகளவு வீடுகட்டி கொடுத்த மாநிலமாக தமிழகம், முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகின்றது என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.

கோவை மாவட்டத்தை பொருத்தவரை, 10,000த்திற்கும் மேற்பட்ட வீடுகள் மாநில அரசின் நிதியுதவித்திட்டத்தின் கீழும் மற்றும் மத்திய அரசு நிதியுதவித்திட்டத்தின் கீழும் கட்டப்பட்டு வழங்கப்பட்டதுடன் மாவட்டத்தில் அனைத்துப்பகுதிகளிலும், பசுமை வீடு திட்டத்தில் ரூ.2.10லட்சம் மதிப்பீட்டில் முழு மான்யத்துடன் வீடு கட்ட பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படுகிறது. வீட்டுமனை இடமிருந்தால் போதும், உடனடியாக வீடுகட்ட உரிய ஆணை வழங்கப்படும் அதுமட்டுமின்றி வீடு கட்;டவோர்க்கு எளிய வகையில் மான்ய விலையில் அம்மா சிமெண்ட் வழங்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி ஒரு குடும்பத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் திருமணமாகியிருந்தால் அவர்களுக்கு வீடு இல்லாத நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் வசிக்கும் வீட்டின் மாடியிலே வீடு கட்ட அதற்கும் ரூ.2.10லட்சத்திற்கான ஆணை வழங்கப்படுகிறது. அதேபோல், சிலப்பகுதிகளில் இடம் இல்லாத நிலையை கருத்தில்கொண்டு தொகுப்பு வீடுகள் கட்டவும், பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதேபோல், அரசு மானிய தொகையை விட கூடுதலாக செலவுசெய்து வீடு கட்டுவோர்களுக்கு, ரூ.6.00லட்சம் வரை குறைந்த வட்டியில் மானிய கடனும் வழங்கப்பட்டு வருகின்றது. இதுபோல் ஏழை எளிய வீடில்லாத குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கான திட்டங்கள் முழுமையாக அம்மா அவர்களின் அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். 

தொடர்ந்து, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசுகையில்,

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், அடித்தட்டு குடிசை வாழ் மக்களின் குறைகளை களைந்து அவர்களுக்கு நல்வாழ்வு அளிப்பதில் நாட்டிலேயே முன்னோடி நிறுவனமாக விளங்குகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அறிவித்த தொலைநோக்கு திட்டம் - 2023-ன் படி தமிழ்நாட்டை குடிசைப்பகுதிகளில்லா மாநிலமாக 2023-க்குள் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு “பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம்” என்ற புதிய திட்டத்தை ஜீன் 2015-ல் அறிவித்தது. அதன்படி நாட்டிலுள்ள வீட்டற்ற ஏழை மக்கள் அனைவருக்கும் 2022-ம் ஆண்டிற்குள் வீடுகள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி கீழ்க்கண்ட நான்கு வகைப்பாடுகளில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1. குடிசைப்பகுதிகள் அமைந்துள்ள இடத்திலேயே மறுமேம்பாட்டு திட்டம் 2. வீடு கட்ட மற்றும் வாங்க பெறப்படும் கடனில் வட்டி சலுகை திட்டம் 3. மக்களின் சக்திகேற்ப வீடு கட்டும் திட்டம் 4. பயனாளிகள் தாங்களாகவே வீடு கட்டும் திட்டம்.

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்த தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தை மாநில ஒருங்கிணைப்பாளராக அரசு நியமித்து உள்ளது. வழிகாட்டுதல் நெறி முறைகளில் குறிப்பிட்டுள்ளபடி தமிழ்நாட்டில் வீட்டு வசதி தேவைகள் கணக்கெடுக்கும் பணி மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் முடிவுற்றுள்ளது. கணக்கெடுப்பின் படியும் இணையதளத்தின் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களின்படியும் 9,73,434 குடும்பங்களுக்கு வீடுகள் தேவை என கண்டறியப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழுமத்திடமிருந்து அதிக அளவில் திட்டங்களுக்கு ஓப்புதல் பெறுவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இதுவரை ரூ.8660.06 கோடி மதிப்பீட்டில் 2,46,268 வீடுகள் கட்ட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய கோயம்புத்தூர் சரகத்தின் மூலம் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இம்மாவட்டங்களில் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக வீடுகள் தேவையென கண்டறியப்பட்டு இதுவரை ரூ.2766.58கோடி மதிப்பீட்டில் 77,517 வீடுகள் கட்ட திட்டபிரேரணைகளுக்கு ஒப்புதல் பெறப்பட்ட பணிகள் நடைபெறுகின்றன. இத்திட்டத்திற்கு தேவையான நிதியொதுக்கீட்டை தமிழ்நாடு அரசு செய்துள்ளது. இத்திட்டத்தினை பொதுமக்களும் அதிகளவில் பண்படுத்தி பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என அவர் பேசினார். 

இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏ.கே.செல்வராஜ், திரு.ஏ.பி.நாகராஜன், சி.மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ச்சுணன், ஆறுகுட்டி, எட்டிமடை சண்முகம், ஆர்.கணகராஜ், கஸ்தூரிவாசு, குணசேகரன், முருகன், சந்திரசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், குடிசை மாற்று வாரியம் கண்கானிப்பு பொறியாளர் சுப்பிரமணியன், செயற்பொறியாளர் ராஜசேகரன், மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சக்திவேல், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...