கோடை விடுமுறையில் சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். இங்குள்ள சுற்றுலா தளங்களான தாவரவியல் பூங்கா, ரோஜாபூங்கா, படகு இல்லம், பைக்காரா நீர்விழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், கூடலூர் தவளைமலை காட்சி, முதுமலை, மசினகுடி, கோத்தகிரி, குன்னூர் சிம்ஸ்பார்க், டால்பின்நோஸ், லேம்ஸ்ராக் என அனைத்து சுற்றுலா தளங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில், இன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பூங்காவில் ஒற்றை யானை நுழைந்ததால் சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஒட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து வந்த குன்னூர் வனத்துறையினர் யானையை இரயில் பாதை வழியில் அடர்ந்த காட்டுக்குள் விரட்டினர்.