பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழக வருகை அலுவல் காரணமாக இரத்து - பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன்

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழக வருகை அலுவல் காரணமாக இரத்து செய்யப்பட்டு இருக்கலாம் எனவும், இதில் வேறு எந்த அரசியல் காரணமும் இல்லை எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா 3 நாட்கள் பயணமாக வருகின்ற 10ம் தேதி தமிழகத்திற்கு வருகை தர இருந்தார். சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளில் அமித்ஷா பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. 11 ம் தேதி கோவையில் நடைபெறும் அமித்ஷா நிகழ்ச்சி ஏற்பாடுகளை பார்வையிட பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் கோவை வந்தார்.

இந்நிலையில் திடீரென அமித்ஷாவின் தமிழக வருகை இரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை கிளம்பும் வழியில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்திரராசன், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அமித்ஷா வருகை அலுவல் காரணமாக இரத்து செய்யப்பட்டு இருக்கலாம் எனவும், வேறு எந்த அரசியல் காரணமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

விரைவில் அமித்ஷாவின் தமிழக வருகை தேதி அறிவிக்கப்படுமெனவும், அப்போது பிரம்மாண்ட முறையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார். 

மருத்துவ மேற்படிப்பிற்கான இடஒதுக்கீட்டை தொடர்ந்து வழங்கக்கோரி, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.

மேலும் மருத்துவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள், பாதிக்கப்படும் ஏழை நோயாளிகள் பற்றி கவலைப்படவில்லை என குற்றம்சாட்டினார். தமிழக அமைச்சர் காமராஜ் மீது வழக்குபதிவு செய்ய உச்சநீதிமன்றம்  உத்தவிட்டும், வழக்கு பதிவு செய்யாமல் இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நீதியை யாரும் மீறக்கூடாது எனவும், நீதிக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் நீதியின் படி தமிழகத்தில் அனைத்தும் நடக்கிறதா என்பது கேள்விக்குறியாக இருப்பதாகவும், இதனை தமிழக முதலமைச்சர்கவனிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...