கோவை தொண்டாமுத்தூரில் யானை தாக்கி கூலித்தொழிலாளி பலி

கோவை தொண்டாமுத்தூரில் நள்ளிரவில் வீட்டு முன் உறங்கிக் கொண்டிருந்த கூலித்தொழிலாளி சந்திரனை (47) காட்டு யானை தாக்கி கொன்றது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.



Coimbatore: கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் கூலித்தொழிலாளி ஒருவரை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தொண்டாமுத்தூர் நரசீபுரம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த சந்திரன் (47) என்ற கூலித்தொழிலாளி, நள்ளிரவு 12 மணியளவில் தனது வீட்டின் முன்புறம் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் வனத்திற்குள் விரட்டி வரும் சத்தம் கேட்டு எழுந்த சந்திரன், யானையைப் பார்த்து பயந்து ஓடியுள்ளார்.

அவரை விரட்டிச் சென்ற யானை, தனது தந்தத்தால் சந்திரனின் முதுகில் குத்தி, காலால் மிதித்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த சந்திரன், முதுகு நெஞ்சுப் பகுதியில் இரத்தக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஆலாந்துறை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இறந்த சந்திரனின் உடலை கைப்பற்றி, ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் எனவும், யானைகளின் பக்கம் செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...