உடுமலையில் ஓய்வு பெற்ற துணைப்பதிவாளர் மனைவி நினைவாக 450 பேருக்கு 9 லட்சம் மதிப்பிலான உதவிகள்

உடுமலையில் ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் கிருஷ்ணன், மறைந்த தனது மனைவி மீனம்மாளின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 450 ஏழை எளிய மக்களுக்கு 9 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கினார்.



திருப்பூர்: உடுமலையில் ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் கிருஷ்ணன், மறைந்த தனது மனைவி மீனம்மாள் அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு 9 லட்சம் மதிப்பிலான உதவிகளை வழங்கினார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுமார் 450க்கு மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், சேலை, போர்வை உள்ளிட்ட 22 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் நிசார் அகமது, அனைத்து துறை ஓய்வு ஊழியர்கள் சங்கம் உடுமலை வட்ட கிளை தலைவர் தாசன், உடுமலை நகர கூட்டுறவு பண்டகசாலை செயலாளர் துரைராஜ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்ட நிர்வாகி சுதா சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், நகர கூட்டுறவு பண்டக சாலை எழுத்தர் லதா, கணக்கம்பாளையம் குடியிருப்போர் சங்கத் தலைவர் ராஜேந்திரன், ஓய்வு பெற்ற வட்டாச்சியர் நடராஜ் மற்றும் ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இது போன்ற தொடர் உதவிகளை கடந்த 10 ஆண்டுகளாக வழங்கி வரும் கிருஷ்ணனின் செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது. தனது மனைவியின் நினைவாக ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் இவரது செயல் சமூகத்தில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...