நிர்பயா வழக்கில் நால்வருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்

கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி நண்பருடன் பேருந்தில் பயணித்து கொண்டிருந்த மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

பெண்ணியத்தின் குரல்வளையை நசுக்கும் விதமான இந்த கோர சம்பவம் நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து, மக்களின் மனதில் எழுச்சி தோன்றி பெரும் போராட்டங்களுக்கு வித்திட்டது. கொலை செய்யப்பட்ட மாணவியின் பெயருக்கு பதிலாக இந்த வழக்கிற்கு நிர்பயா என்று பெயரிடப்பட்டது.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பத்தை அரங்கேற்றிய அந்த 6 பேருக்கும் கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்று பல்வேறு மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இக்கொலை தொடர்பாக 18 வயதான சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். ஒரு இளம் குற்றவாளி 3 ஆண்டு சிறை தண்டனைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

சிறையில் இருந்த 5 நபர்களின் முக்கிய குற்றவாளியான ராம்சிங் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மீதமுள்ள 4 பேருக்கு மரண தண்டனை விதித்து டெல்லி கீழ் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை கடந்த 2014 டெல்லி உயர்நீதி மன்றமும் உறுதி செய்தது. 

இந்த நிலையில், குற்றவாளிகள் தரப்பில் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி, அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று மதியம் 2 மணியளவில் வெளியிட்டனர். அதில், நிர்பயா பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே உலுக்கிய ஒன்று என்றும், குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்களும், சாட்சியங்களும் பலமாக உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், இது காட்டுமிராண்டித்தனமான படுகொலை என்று கூறி, 4 பேரின் மரண தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர்.

Newsletter

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...