எஸ்.எஸ்.குளம் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு - நூற்றுக்கணக்கான மக்களுடன் வந்த அதிமுக எம்எல்ஏ

கோவை மாவட்டம் எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாணைப்பட்டி ஊராட்சி தலைவர் கவிதா மீது முறைகேடு புகார். அதிமுக எம்எல்ஏ பி.ஆர்.ஜி அருண்குமார் தலைமையில் நூற்றுக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.



கோவை: கோவை மாவட்டம் எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாணைப்பட்டி ஊராட்சியின் முன்னாள் தலைவர் கவிதா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக எம்எல்ஏ பி.ஆர்.ஜி அருண்குமார் தலைமையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

வெள்ளாணைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருந்த கவிதா, சில முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்ததையடுத்து, அந்த ஊராட்சியில் சிறப்பு அலுவலரால் நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 20ம் தேதி அப்பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டபோது, கவிதா மீண்டும் தனக்கு சாதகமானவர்களைக் கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து ஊராட்சி செயலாளரிடம் முறையிட்டபோது, கவிதாவை சார்ந்தவர்கள் தங்களிடம் தகராறு செய்வதாக கூறி, அந்த ஊராட்சியின் வார்டு உறுப்பினர்களான சுமதி வடிவேலு, சகுந்தலா தேவி, ராஜேஸ்வரி, செல்வி ஆகியோர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமாரை அணுகினர். அவரது முன்னிலையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

மேலும், கவிதா தங்களை ஜாதி பெயரைக் குறிப்பிட்டு இழிவுபடுத்துவதாகவும், தங்கள் மீது பொய் புகார் அளித்திருப்பதாகவும் கூறிய வார்டு உறுப்பினர்கள், அவர் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார், "நடந்த விஷயம் குறித்து விளக்கமளிக்க வந்தோம். மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்," என்று தெரிவித்தார்.



மனு அளிப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து வந்ததால், சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...