தமிழகத்தில் குண்டாஸ் சட்டம் மோசமாக பயன்படுத்தப்படுகிறது - கோவையில் சவுக்கு சங்கர் வழக்கறிஞர்

கோவையில் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்தியாவில் போடப்படும் குண்டாஸில் 51% தமிழகத்தில் மட்டும் போடப்படுவதாகவும், தமிழ்நாடு போலீஸ் ஸ்டேடாக மாறி வருவதாகவும் கூறினார்.



கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், சவுக்கு சங்கர் மீது போடப்பட்டிருந்த இரண்டாவது குண்டாஸ் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் அவரை விடுதலை செய்யச் சொல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தமிழக அரசே சவுக்கு சங்கர் மீது போடப்பட்டிருந்த குண்டாஸை திரும்பப் பெற்றுள்ளதாகவும் கூறினார்.

இந்தியா முழுவதும் போடப்படுகிற குண்டாஸில் 51% தமிழகத்தில் மட்டும் போடப்படுவதாகவும் குண்டாஸ் சட்டம் தமிழகத்தில் மிகவும் மோசமாக பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார். தமிழக அரசு, சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடுபவர்கள் மீது கவனம் செலுத்தாமல் மக்களின் அன்றாட பிரச்சினைகள் மீது கவனம் செலுத்தி தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கும் நிலையை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தற்போது சாதாரண குற்றவாளியை பிடிப்பதற்கு கூட கை கால்களை உடைத்தும் துப்பாக்கி சூடு நடத்தியும் கைது செய்யப்படுவதாகவும் தமிழ்நாடு போலீஸ் ஸ்டேடாக மாறி வருவதாகவும் கூறினார். சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்டிருக்கும் பிணைகளில், பேட்டியளிக்கக்கூடாது, பேசக்கூடாது என்று எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

சட்டம் அனைவருக்கும் சமமானது என்றால், யார் அவதூறு பரப்பினாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆனால் குறிப்பிட்ட ஒரு சாரார் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் கூறினார். தற்போது துப்பாக்கிச் சூடு என்பது மிகவும் இயல்பான ஒன்றாக மாறி வருவதாகவும் இது மிகவும் ஆபத்தான விஷயம் என்றும் கூறிய அவர், இத்தனை துப்பாக்கிச் சூடுகள் நடத்தி கைது செய்யப்பட்டது போன்று நக்சலைட் பரவலாக இருந்த மாநிலங்களில் கூட இல்லை என்றார்.

Newsletter

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...