கோவை மருதம் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கோவை வ.உ.சி பூங்கா அருகில் உள்ள மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2024 சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தொடங்கி வைத்தார். கைத்தறி ரகங்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.



Coimbatore: கோவை வ.உ.சி பூங்கா அருகில் உள்ள மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை கோவை மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati, விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தீபாவளி 2024 சிறப்பு விற்பனைக்காக கைத்தறி ரகங்கள் அனைத்து விற்பனை நிலையங்களில் 30% சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.

தீபாவளி 2024 சிறப்பு தள்ளுபடி விற்பனைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புகளுடன் கூடிய பட்டு, பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், வேட்டிகள், தலையணை உறைகள், லுங்கிகள், துண்டு ரகங்கள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.



மேலும், ஆடவர் அணியும் ஆயுத்த சட்டைகள், மகளிர் விரும்பும் சுடிதார் ரகங்கள், ஆர்கானிக் பருத்தி சேலைகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம் பர்னிசிங் ரகங்கள் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பட்டு ரக உற்பத்தியில் பாரம்பரியமாக ஈடுபட்டு வருகிறது. காஞ்சிபுரம், சேலம், கோவை, ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு பட்டுச்சேலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...