உலக மருந்தாளுநர்கள் தினம்: கோவையில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

கோவையில் உலக மருந்தாளுநர்கள் தினத்தை முன்னிட்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி மற்றும் இந்திய மருந்து சங்கம் சார்பில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பேரணியை தொடங்கி வைத்தார்.



Coimbatore: உலக மருந்தாளுநர்கள் தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. "மருந்தாளுநர்கள்: உலகளாவிய சுகாதாரத் தேவைகளை சந்தித்தல்" என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த பேரணிக்கு எஸ்.என்.எஸ் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை தாங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி மற்றும் இந்திய மருந்து சங்கம் (IPA) ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.



பேரணியில் கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு மருந்தியல் கல்லூரிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மருந்து பாதுகாப்பு மற்றும் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மருந்தாளுநரின் பங்களிப்புகளை எடுத்துரைக்கும் பதாகைகளை மாணவர்கள் பேரணியின் போது ஏந்தி சென்றனர்.

இந்த பேரணியானது கோவை ரேஸ் கோர்ஸ், ஸ்ரீ சாரதாம்பாள் கோவில் அருகே 2.5 கிலோமீட்டர் தொலைவு வரை தொடங்கி முடிந்தது. மருந்தாளுநர்களின் முக்கியத்துவம் மற்றும் அவர்களின் சேவைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதே இந்த பேரணியின் முக்கிய நோக்கமாக இருந்தது.



Newsletter

கோவை விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கோவை விமான நிலையம் வந்தடைந்தார். திமுக மாநில தீர்மானக் குழு செயலா...

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: 100 சதவீத வாக்களிப்பு விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran துவக்கி வைத்தார்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான 100 சதவீத வாக்களிப்பு வி...

கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியில் 7வது தேசிய மினி பைக் பந்தயம் சிறப்பாக நடைபெற்றது

கோயம்புத்தூர் கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியில் மார்ச் 18 அன்று 7வது தேசிய அளவிலான மினி பைக் பந்தயம் RIVALS'26 நடைபெற்றத...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 23 நிலவரப்படி முழு விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளிலும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி, திருமூர்த்தி அ...

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...