கோவை பீளமேடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி பெயிண்டர் பலி

கோவை பீளமேடு கோல்ட்வின்ஸ் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் இரண்டு பேர் மீது மோதியது. விபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெயிண்டர் ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை பீளமேடு கோல்ட்வின்ஸ் பகுதியில் நேற்று (செப்டம்பர் 22) கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையில் நடந்து சென்ற இரண்டு பேர் மீது மோதியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

விபத்து நடந்த உடனேயே அப்பகுதி வழியாக சென்றவர்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அதில் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், விபத்தில் உயிரிழந்தவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெயிண்டர் ரமேஷ் (50) என்பதும், படுகாயமடைந்தவர் திண்டுக்கல் அய்யன்குளம் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துராஜா (42) என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்து, பீளமேடு பகுதியில் தங்கியிருந்து பெயிண்டிங் வேலை பார்த்து வந்ததாகவும் தெரிய வந்தது.

விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தவர் திருப்பூர் தென்னம்பாளையத்தைச் சேர்ந்த சீனிவாசன் (53) என்பது தெரியவந்துள்ளது. இவர் மீது கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...