காங்கேயத்தில் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் விழா: அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி வ. ஜெயராமன், தமோதிரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சென்னிமலை சாலையில் அமைந்துள்ள திடலில் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஒன்றிய கழக செயலாளருமான என்.எஸ்.என். நடராஜன் தலைமை தாங்கினார். காங்கேயம் நகரச் செயலாளர் வெங்கு ஜி. மணிமாறன் முன்னிலை வகித்தார்.



சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அமைச்சரும் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளருமான பொள்ளாச்சி வ. ஜெயராமன் மற்றும் முன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான தமோதிரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவின் தொடக்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. என்.என்.நடராஜ் வரவேற்புரை ஆற்றினார். வருகை தந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.



முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் தனது உரையில், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சாதனைகளை நினைவுகூர்ந்தார். தற்போதைய கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமியின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார். ஜெயலலிதாவின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், கொரோனா காலத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகள் குறித்தும் அவர் விளக்கினார்.



"அதிமுக கட்சி என்பது தங்கம் போன்றது, ஒவ்வொரு முறையும் சுட்டெரிக்கும் போது தரம் குறையாமல் மேலும் மேலும் மெருகேறும். அதுபோல கண்டிப்பாக அதிமுக அடுத்த தேர்தலில் ஆட்சி அமைக்கும் என்பது சத்தியம்," என்று ஜெயராமன் தனது உரையை முடித்தார்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...