பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்

கோவை சவுரிபாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.


Coimbatore: பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்கை மண்டலில் சவுரிபாளையம் பகுதியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் இன்று (செப்டம்பர் 22) மேளதாளங்களுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.

சிங்கை மண்டல உறுப்பினர் சேர்ப்பு பொறுப்பாளர் ரமேஷ்குமார், SRS.ராஜா ஆகியோர் தலைமையில் வழிபாடு நடைபெற்றது. மாவட்ட உறுப்பினர் சேர்ப்பு பொறுப்பாளர் RT.முரளி, மண்டல உறுப்பினர் சேர்ப்பு பொறுப்பாளர்கள் பைலட் முருகேசன், பிரசாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



தொடர்ந்து, உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவர் ஜே.ரமேஷ் குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும், மாவட்ட துணைத் தலைவர் M.R.சரவணன், ராஜசேகர், அசோக்குமார், ராஜேந்திர பிரசாத், காட்டன்சுரேஷ், சக்தி, கணேசன், பூபேஷ், சொர்ண அரவிந்த், கண்ணன், வில்லியம்ஸ், மகேந்திரன் மற்றும் பல தாமரை சொந்தங்கள் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்வு பிரதமர் மோடியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நடைபெற்றதோடு, பாஜகவின் உறுப்பினர் சேர்க்கையையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது. கோவில் வளாகத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Newsletter

திராவிட மாடல் ஆட்சியில் ஈர்க்கப்பட்டு அதிமுக மாற்று அணியினர் 300 பேர் திமுகவில் இணைப்பு

கோவை கொடிசியாவில் அதிமுக மாற்று அணி மாவட்ட செயலாளர்கள் மோகன்ராஜ், குணாளன், முருகேசன் உட்பட 300க்கும் மேற்பட்டோர் முதல்வர...

கோவை உக்கடம் மீன் சந்தையில் வரத்து குறைவால் விலை உயர்வு

கோவை உக்கடம் லாரிப்பேட்டை மொத்த மீன் மார்க்கெட்டில் கேரளா, கர்நாடகாவில் இருந்து வரும் மீன்கள் வரத்து குறைந்ததால் விலை அத...

ஓணம்பாளையம் குடியிருப்பில் கஞ்சா செடி பறிமுதல் - வட மாநில தொழிலாளர்கள் விசாரணையில்

வடவள்ளி அருகே ஓணம்பாளையத்தில் வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதியில் 4 அடி உயர கஞ்சா செடி கண்டுபிடிக்கப்பட்டது. கா...

தேர்தல் சின்ன விவகாரம்: குப்பை சேகரிப்பு விசில் ஒலிக்கத் தடை கோரி மனு

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் குப்பை சேகரிக்கும்போது அடிக்கும் விசில், அரசியல் கட்சியின் தேர்தல் சின்னம் என்ப...

தேர்தல் சின்னமான விசில் ஒலிக்கு தடை கோரி மாமன்ற உறுப்பினர் மனு: கோவை ஆட்சியருக்கு சித்ரா வெள்ளியங்கிரி கோரிக்கை

கோவை மாநகராட்சியில் குப்பை சேகரிப்பின்போது தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்தும் விசில், மற்றொரு அரசியல் கட்சியின் தேர்தல்...

தேர்தல் சின்னமான விசில் ஒலிக்கு தடை கோரி கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மனு

கோவை மாநகராட்சியில் குப்பை சேகரிக்கும் தூய்மைப் பணியாளர்கள் விசில் பயன்படுத்துவது மற்றொரு அரசியல் கட்சியின் தேர்தல் சின்...