அதிமுக கட்சியை பாஜகவிடம் அடிமையாக்கியது எடப்பாடி பழனிச்சாமியின் பெரும் தவறு - தயாநிதி மாறன் விமர்சனம்

கோவையில் நடைபெற்ற திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மண்டல அளவிலான ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசினார். அதிமுக, பாஜக அரசு மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.



Coimbatore: கோவையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில், திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்போ அல்லது ஜாதி வாரி கணக்கெடுப்போ நடத்தவில்லை என்றும், ஆனால் பல நாடுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திவிட்டார்கள் என்றும் கூறினார். மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தில் பல குழப்பங்கள் உள்ளதாகவும், இதில் எழும் சந்தேகங்களுக்கு பதில் ஏதுமில்லை எனவும் அவர் விமர்சித்தார்.



தயாநிதி மாறன் தொடர்ந்து பேசுகையில், மக்கள் தங்களது பிரச்சனையை சொன்னால் பாஜக அரசு அதை திசை திருப்புவதாகவும், அன்னபூர்ணா விவகாரத்தில் கோவை மக்களை மிரட்டுகிறார்களோ என்று தோன்றுவதாகவும் கூறினார். மேலும், நிர்மலா சீதாராமன் வடமாநிலத்தில் ஹிந்தி மொழியில் கேள்வி கேட்பவர்களுக்கு மரியாதை கொடுப்பதாகவும், ஆனால் தமிழில் கேள்வி கேட்டால் மரியாதை கொடுப்பதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

நீட் தேர்வில் நடந்த முறைகேடு குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த தயாநிதி மாறன், மதத்தை வைத்தே தொடர்ந்து பாஜக அரசியல் செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.

அதிமுக குறித்து கருத்து தெரிவித்த அவர், அதிமுக மிக கஷ்டமான காலத்தில் உள்ளதாகவும், முதுகு தண்டு வளைந்துள்ளதால் தான் அவர்களால் நிமிர முடியவில்லை எனவும், கட்சியை பாஜகவிடம் அடிமையாக்க வைத்திருந்ததே எடப்பாடி பழனிச்சாமி செய்த மிகப்பெரிய தவறு எனவும் விமர்சித்தார்.

அதிமுகவின் வைத்திலிங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதிவு செய்தது குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்துக்கு பதிலளித்த தயாநிதி மாறன், "ஒன்றாக ஆட்சி செய்யும் போது பணம் வாங்கிய போதும் தெரியாதா?" என்று கேள்வி எழுப்பினார்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...