ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் இருதய ஆரோக்கிய கண்காட்சி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை புரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் இருதய ஆரோக்கியம் குறித்த மாபெரும் கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கண்காட்சியை துவக்கி வைத்தார்.



கோவை: கோவை புரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் இருதய ஆரோக்கியம் குறித்த மாபெரும் கண்காட்சி இன்று துவங்கியது. இளம் தலைமுறையினருக்கு இருதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



SNR சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன் ஆகியோர் முன்னிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இந்த கண்காட்சியை துவங்கி வைத்து பார்வையிட்டார்.



மருத்துவமனையின் இருதயவியல் மற்றும் இருதய அறுவை சிகிச்சை துறையின் மருத்துவர்கள் கண்காட்சியை வழிநடத்தினர்.



நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், நோயில்லா வாழ்விற்கு சரியான உணவு பழக்கமும் உடற்பயிற்சியும் அவசியம் என்றும், அரசு சார்பில் சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், அரசு விழாக்களில் அங்கன்வாடி சார்பில் அரங்கம் அமைக்கப்பட்டு ஆரோக்கியமான வாழ்விற்கு தேவையானவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.



இக்கண்காட்சியில், பார்வையாளர்களுக்கு இருதய செயல்பாடு மற்றும் இருதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் மாதிரி இருதயத்தின் உடற்கூறியல் இடம்பெற்றிருந்தது. மேலும் இதயத்தில் ஸ்டென்ட் எவ்வாறு பொருத்தப்படுகின்றன, இதயத்தில் உள்ள அடைப்புகளுக்கு எவ்வாறு சிகிச்சையளிக்கப்படுகின்றன என்பது குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. பேஸ்மேக்கர் குறித்த காட்சியும் இடம் பெற்றிருந்தது. இந்த உயிர்க்காக்கும் கருவிகள் எவ்வாறு உடலில் பொருத்தப்பட்டு செயல்படுகின்றன என்பது குறித்தும் சீரற்ற இதய துடிப்புகளை இக்கருவிகள் மூலம் சீராக வைத்திருப்பது குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.

குழந்தைகளுக்கான இருதயவியல், சிறப்பு இருதய அறுவை சிகிச்சைகள் மற்றும் எலெக்ட்ரோபிசியாலஜி, லேசர் கரோனரி ஆன்ஜியோபிளாஸ்ட்டி குறித்த புதிய முன்னேற்றங்கள் பற்றிய விவரங்களும் காணொளிகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டது.



கண்காட்சியில் நேரடியாக சிபிஆர் (CPR) செயல்விளக்கம் பொதுமக்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர்கள், இருதய நோய்களைத் தவிர்க்க உதவும் ஆரோக்கியமான உணவுகள் மற்றும் வாழ்க்கை முறைகள் பற்றிய முக்கிய குறிப்புகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.



இக்கண்காட்சி செப்டம்பர் 22 வரை நடைபெறும் என கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் 72 சதவீத வாக்குப் பதிவு; இன்று முடிவுகள் அறிவிப்பு

கோவை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் 3,647 வாக்காளர்களில் 2,626 பேர் வாக்களித்தனர். தலைவர், துணைத் தலைவர், செயலாளர...

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...