கரூரில் இருந்து திருட்டுத்தனமாக மணல் திருடிவந்த லாரியை சிறைபிடித்த சூலூர் லாரி உரிமையாளர்கள்

கரூரில் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புடைய மணலை திருட்டுத்தனமாக கொண்டு வந்த லாரிகளை சூலூர் லாரி உரிமையாளர்கள் சிறைபிடித்தனர்.

தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளில் மணல் எடுக்க தடை விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக கரூர் மற்றும் திருச்சி பகுதிகளில் உள்ள குவாரிகளில் மணல் திருடப்பட்டு வந்தது.

இது குறித்து உரிய சோதனை மேற்கொள்ள அனைத்து சோதனைச் சாவடிகளுக்கும் அரசு அறிவுறுத்தியிருந்தாலும், காவல்துறைக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு திருட்டு மணல் விற்பனை படுஜோராக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.



இந்நிலையில் இன்று அதிகாலை கரூரில் இருந்து 12 சக்கரம் கொண்ட நான்கு லாரிகளில் 36 யூனிட் மற்றும் 10 சக்கரம் கொண்ட ஒரு வாகனத்தில் 3.5 யூனிட் மணலும் விற்பனைக்காக கொண்டு வரும்போது சூலூர் மணல் லாரி உரிமையாளர்கள் வட்டாட்சியர் பழனி முன்னிலையில் சிறைபிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, மணல் லாரிக்கு முன்பாக வந்த காரில் இருந்தவர்கள் வட்டாட்சியரை லாரிகளை விடச்சொல்லி மிரட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து, சூலூர் மணல் லாரி உரிமையாளர்கள் மிணல் திருடி வந்தவர்களை எதிர்த்த நிலையில், காரில் வந்தவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

தமிழக அரசு உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மணல் குவாரிகள் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...