திமுக தொண்டர்கள் உழைக்க, கலைஞர் குடும்பம் பிழைக்கும் - தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

கோவையில் பாஜக மாநில முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் திமுகவின் குடும்ப அரசியலை கடுமையாக விமர்சித்தார். திமுக தொண்டர்கள் உழைக்க, கலைஞர் குடும்பம் பிழைக்கும் என்று குற்றம்சாட்டினார்.


Coimbatore: கோவையில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த பாஜக மாநில முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், செய்தியாளர்களிடம் பேசினார். அவர் திமுகவின் குடும்ப அரசியலை கடுமையாக விமர்சித்தார்.

"திமுக நூற்றாண்டு விழா கொண்டாடும் போது உதயநிதி தலைமை, 125-ம் ஆண்டு விழாவின் போது அவரது மகன் தலைமை என திமுக தொண்டர்கள் உழைத்து கொண்டே இருக்க வேண்டும். கலைஞர் குடும்பம் பிழைத்து கொண்டே இருக்கும்," என்று தமிழிசை குற்றம்சாட்டினார்.

அவர் மேலும் கூறுகையில், "பவள விழா தொண்டர்களுக்காக நடத்தப்பட்டது அல்ல. உதயநிதி முடிசூடுவதற்கான ஆரம்ப விழா. திமுக-வின் நூற்றாண்டு விழா கொண்டாடும் போது உதயநிதி தலைமை, 125-வது ஆண்டு விழாவின் போது உதயநிதியின் மகன் தலைமை என திமுகவில் தொண்டர்கள் உழைத்து கொண்டே இருக்க வேண்டும். அதை கொண்டு கலைஞர் குடும்பம் பிழைத்துக்கொண்டே இருக்கும்," என்றார்.

தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் தமிழிசை விமர்சனம் செய்தார். "வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை முதல்வர் ஈர்த்து வருவதாக தமிழக அரசு கூறி வரும் நிலையில் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்கிறது. கமிஷன், ஊழல் என கம்யூனிஸ்ட்கள் உள்ள வரை தமிழகத்தில் தொழிற்சாலைகளை சிறப்பான முறையில் நடத்த முடியாது," என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், குழந்தைகளுக்கு அரசு வழங்கும் முட்டைகள் சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும், கல்வித்துறையில் முறைகேடுகள் நடப்பதாகவும் தமிழிசை குற்றம்சாட்டினார். இவை குறித்து கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

"ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்தை வரவேற்றதாகவும், இதனால் மக்களின் நேரமும் வரிப்பணமும் சேமிக்கப்படும் என்றும் தமிழிசை கூறினார். பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் சேவை நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...