கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் உள்ள கோவை தெற்கு மண்டலம் பின்புறத்தில் பிளாஸ்டிக் குடோன் ஒன்று சில வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த பிளாஸ்டிக் குடோனில் மருத்துவ கழிவுப் பொருட்கள் கொட்டப்படுவதாகவும், அருகில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் தனியார் பள்ளிகள் செயல்படுவதாகவும் தன்னார்வ அமைப்பாளர்கள் சிலர் தகவல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு பார்வையிட்ட போது, இந்த குடோனின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் என்பவர் சில வருடங்களாக பிளாஸ்டிக் குடோனை இங்கு நடத்தி வருவதாகவும், பழைய பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள், மருத்துவப் பொருட்களில் பயன்படுத்தப்பட்ட மருத்துவ ஊசிகள் மற்றும் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் போன்ற மக்காத பொருட்களைக் கொண்டு மறுசுழற்சி முறையில் உருக்கி பிளாஸ்டிக் கட்டிகளை தயாரித்து வருவதாக கூறுகின்றனர்.

உபயோகிக்கப்பட்ட இந்த பிளாஸ்டிக் பொருட்கள் இங்கு சேகரிக்கப்பட்டும், பின்னர் அதனை ஊழியர்கள் மூலம் தனித்தனியாக பிரித்த பின்னர் இயந்திரத்தின் மூலம் அந்த பொருட்களை அரைத்து உருக்கிய பின்னர் அந்த உருக்கிய பிளாஸ்டிக் கட்டிகளை மற்ற இடங்களில் கொண்டு சென்று மறுசுழற்சி முறையில் புதிய குடம், பக்கெட், டிப்பர் போன்ற பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்து வருவதாகவும் கூறுகின்றனர்.

இதனை, உரிய முறையில் இயந்திரத்தின் மூலம் மறுசுழற்சி செய்யப்படுவத்தினால், கரும்புகை போன்ற எவ்வித பாதிப்பும் இல்லை என்கின்றனர் அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள். மேலும், இங்கு தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.