பொள்ளாச்சி நகராட்சியில் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண கள ஆய்வு

பொள்ளாச்சி நகராட்சியில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். வார்டுகளில் நேரடி ஆய்வு மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சி.



கோவை: பொள்ளாச்சி நகராட்சியில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க நகராட்சி நிர்வாக அதிகாரிகள், நகர மன்ற தலைவர் தலைமையில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் 36 வார்டுகளில் ஒவ்வொரு வாரமும் பிரதி செவ்வாய்க்கிழமை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டங்களில் பெறப்படும் மனுக்களுக்கு அவ்வப்போது தீர்வுகள் எட்டப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, நேரடியாக தினசரி 3 வார்டுகள் வீதம் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இன்று பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 1, 2, 3 வார்டுகளில் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் கணேசன் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.





இந்த ஆய்வின் போது, வடுகபாளையம் நடுநிலைப் பள்ளியில் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் பள்ளி வகுப்பறை, கழிப்பிடம், சமையலறை கூடம் மற்றும் காலை சிற்றுண்டி திட்டம் குறித்தும் ஆய்வு செய்தார்.



மேலும், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.



இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள தேவையற்ற செடிகளை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Newsletter

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...