கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 300 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 300 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மோ.ஷர்மிளா மனுக்களை பெற்று, விரைவான நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (16.09.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மோ.ஷர்மிளா அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் நாட்டுப்புற நல வாரிய நிர்வாக குழு உறுப்பினர் கலைமாமணி. சி.கலாராணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) திருமதி.மு.கோகிலா, துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி.மதுஅபிநயா, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் திரு.சுரேஷ், தாட்கோ மாவட்ட மேலாளர் திருமதிமகேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் அளித்தனர்.

பொதுமக்களிடமிருந்து இலவச வீடு வேண்டி 53 மனுக்களும், வீட்டுமனைப் பட்டா வேண்டி 102 மனுக்களும், வேலைவாய்ப்பு வேண்டி 8 மனுக்களும், 137 இதர மனுக்கள் என மொத்தம் 300 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் சார்பில் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரிய உறுப்பினர்களான ஒரூ பயனாளிக்கு ரூ.1500 மதிப்பில் மூக்கு கண்ணாடிக்கான உதவித்தொகையும், 10 பயனாளிகளுக்கு ரூ.13000 மதிப்பில் கல்வி நிதி உதவித்தொகையும், ஈமச்சடங்கு உதவிதொகையாக 2 நபர்களுக்கு தலா ரூ.25000 உதவித்தொகை என மொத்தம் 13 பயனாளிகளுக்கு ரூ.65000 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மோ.ஷர்மிளா அவர்கள் வழங்கினார்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...