கோவை வடக்கு மாவட்ட திமுகவின் பொது உறுப்பினர் கூட்டம் கோவில்பாளையத்தில் நடைபெற்றது

கோவை வடக்கு மாவட்ட திமுகவின் பொது உறுப்பினர் கூட்டம் கோவில்பாளையத்தில் உள்ள ஸ்ரீ குமரன் மஹாலில் நடைபெற்றது. மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா மற்றும் மாநில மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.


கோவை: கோவை வடக்கு மாவட்ட திமுகவின் பொது உறுப்பினர் கூட்டம் கோவில்பாளையத்தில் உள்ள ஸ்ரீ குமரன் மஹாலில் செப்டம்பர் 12 அன்று நடைபெற்றது.



இக்கூட்டத்திற்கு கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமை வகித்தார்.



கழக கொள்கை பரப்பு செயலாளரும் மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா M.A,B.L., மற்றும் மாநில மாணவரணி தலைவர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.



இந்த கூட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட பல்வேறு நிலைகளில் உள்ள நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், பேரூர் மற்றும் வார்டு கழக செயலாளர்கள், ஊராட்சி கிளை கழக செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.



மேலும், சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாமன்ற உறுப்பினர்கள், பாகநிலை முகவர்கள் (BLA 2), பூத் கமிட்டி உறுப்பினர்கள், கழக மூத்த முன்னோடிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் என பலதரப்பட்ட உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...