வால்பாறை அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள்; அச்சத்தில் மக்கள்

வால்பாறை அருகே சோலையார் எஸ்டேட் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தன. பகல் நேரத்தில் யானைகள் சுற்றித் திரிவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சுற்றித் திரிந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இன்று மதியம் பட்டப்பகலில் இரண்டு காட்டு யானைகள் சோலையார் எஸ்டேட் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தன. அங்குள்ள வாழை மரங்களை சாப்பிட்ட பின், தேயிலை தோட்டம் வழியாக பிரதான சாலையைக் கடந்து மீண்டும் குடியிருப்பு வழியாகச் சென்று, தேயிலை தோட்டத்தில் நின்றன.

இதைப் பார்த்த பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்தனர். தகவல் அறிந்த மானாம்பள்ளி வனத்துறையினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்து, இரண்டு யானைகளையும் வனப் பகுதிக்கு விரட்டினர்.

காட்டு யானைகள் பகல் நேரத்தில் குடியிருப்பு பகுதியில் சுற்றி வருவதால் மக்கள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர். இந்த யானைகளை நிரந்தரமாக வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்...

கரூர் தேர்தல் களத்தில் பரபரப்பு: செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு..!

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 7 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று கா...

“எடப்பாடி சொல்வது போல யாருடைய காலிலும் விழுந்த அனுபவம் எனக்கு இல்லை” - காங்கேயத்தில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின...

கோவை வடக்கில் வானதிக்கு ஆதரவாக BJP மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தீவிர பரப்புரை

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் ஓணாம்பாளையத்தில் இன்று பரப்பு...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் தீவிர பிரசாரம்

கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் வீடு வீடாக சென்று பி...

கோவை தெற்கு தொகுதி: ராமநாதபுரம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் ராமநாதபுரம் வார்டு 66 உட்பட பல பகுதிகளில் வீடு வீடாகச் சென்று...