கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், 32-வது வார்டுக்குட்பட்ட விளாங்குறிச்சி பகுதியில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தினை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றி வருவதையும், தேவையற்ற பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதையும் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழுக்கள் உள்ளனவா என அவர் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, விளாங்குறிச்சி, குமுதம் நகர் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பூங்காவை க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன் துணை ஆணையர் ப.காந்திமதி, கிழக்கு மண்டல உதவி ஆணையர் ரவிக்குமார், மாநகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.