தென்னக ரயில்வேயில் முதலிடம் பிடித்த சென்னை மத்திய ரயில் நிலையம்; கோவை ரயில் நிலையம் மூன்றாவது இடத்தில்

2023-24 ஆம் ஆண்டில் தென்னக ரயில்வேயின் முதல் 10 ரயில் நிலையங்களின் பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருவாய் பட்டியலில் சென்னை மத்திய ரயில் நிலையம் முதலிடத்தில் உள்ளது. கோவை ரயில் நிலையம் மூன்றாவது இடத்தில் உள்ளது.


கோவை: தென்னக ரயில்வேயின் 2023-24 ஆம் ஆண்டிற்கான பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருவாய் அடிப்படையில் முதல் 10 ரயில் நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை மத்திய ரயில் நிலையம் முதலிடத்தில் உள்ளது.

சென்னை மத்திய ரயில் நிலையம் 3.05 கோடி பயணிகளை கையாண்டு ரூ.1300 கோடி வருவாய் ஈட்டி முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 1.95 கோடி பயணிகளுடன் ரூ.600 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. மூன்றாவது இடத்தில் கோவை ரயில் நிலையம் 1.02 கோடி பயணிகளை கையாண்டு ரூ.345 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

நான்காவது இடத்தில் திருவனந்தபுரம் மத்திய ரயில் நிலையம் 1.27 கோடி பயணிகளுடன் ரூ.281 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஐந்தாவது இடத்தில் தாம்பரம் ரயில் நிலையம் 3.27 கோடி பயணிகளை கையாண்டு ரூ.246 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

ஆறாவது இடத்தில் எர்ணாகுளம் ஜங்ஷன் 88 லட்சம் பயணிகளுடன் ரூ.241 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஏழாவது இடத்தில் மதுரை ரயில் நிலையம் 75 லட்சம் பயணிகளுடன் ரூ.224 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. எட்டாவது இடத்தில் கோழிக்கோடு ரயில் நிலையம் 1.14 கோடி பயணிகளுடன் ரூ.190 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

ஒன்பதாவது இடத்தில் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையம் 79 லட்சம் பயணிகளுடன் ரூ.165 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. பத்தாவது இடத்தில் திருச்சூர் ரயில் நிலையம் 69 லட்சம் பயணிகளுடன் ரூ.164 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...