கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு: சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

இரண்டு மாதங்கள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தந்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான கோவை குற்றாலம், இரண்டு மாதங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அருவி, உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் இடமாக உள்ளது.

கடந்த ஜூன் 26 ஆம் தேதி, கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வனத்துறை இந்த அருவியை மூடியது. தற்போது நீர்வரத்து சீரான நிலையில், வனத்துறை மீண்டும் கோவை குற்றாலத்தை திறந்துள்ளது. இந்த அறிவிப்பு கோவை மக்களை மகிழ்வித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்திற்கு வருகை தந்தனர். குறிப்பாக செப்டம்பர் 8, ஞாயிற்றுக்கிழமையன்று அதிக எண்ணிக்கையிலான மக்கள் குவிந்தனர். அருவியின் ஆர்ப்பரிக்கும் வெள்ளத்தில் குழந்தைகளும் பெரியவர்களும் குளித்து மகிழ்ந்தனர்.

கோவை குற்றாலத்தில் அவ்வப்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக வனத்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம். இம்முறையும் பாதுகாப்பு கருதி மூடப்பட்டிருந்த அருவி, தற்போது பாதுகாப்பான நிலையில் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்று வாக்கு சேகரித்த K.R. Jayaram

கோவை சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K.R. Jayaram ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்பனையில் ஈடுபட்டு வா...

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...